அடுத்த வெற்றிக்கு தயாராகிய இஸ்ரோ..!! ககன்யான் திட்டம் சோதனை..!!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் “ககன்யான் திட்டம்” வரும் 21 ஆம் தேதி காலை செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கி, இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்தது. தனது ஆய்வு பணியை 14 நாட்களாக விக்ரம் லேண்டர், ரோவர் சிறப்பாக மேற்கொண்ட நிலையில், நிலவில் எடுத்த படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது.
ரோவர், லேண்டர் மீண்டும் கண் விழிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை மீண்டும் ரோவர், லேண்டர் கண் விழிக்கவில்லை.
இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விக்ரம் லேண்டர் நிலவில் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருப்பதாகவும், அது விழிப்பதற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து 21 ஆம் தேதி காலை 7 முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்கலத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 400 கி.மீ கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..