ஐ ஜாலி பண்டிகை காலம் வந்தாச்சி என துள்ளி குதிக்கும், நடிகை “ராசி கண்ணா”
தமிழில் “இமைக்க நொடிகள் ” படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராசி கண்ணா தனது முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் கொள்ளை அடித்து சென்றவர் .
அதை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், அரண்மனை 3, சர்தார் ஆகிய படங்களின் நடித்து பிரபலம் ஆனவர் ராசி கண்ணா ,தற்போது பண்டிகை கால குஷியில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதை பற்றி அவர் பேசிய போது “நவராத்திரியில் இருந்து புத்தாண்டு வரை” ஒரே பண்டிகை கொண்டாட்டத்தில் தான் நான் இருப்பேன் நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் அம்மனை பூஜை செய்து வழிபடுவேன்.
நவராத்திரி முடிந்ததும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவேன். எனக்கு தீபாவளிதான் பெரிய பண்டிகை. அப்போது பட்டாசுகள் வெடிப்பேன். புதிய ஆடைகள் அணிவேன், இனிப்பு சாப்பிடுவேன்.
அதன்பிறகு நவம்பர் 30-ந் தேதி எனது பிறந்த நாள். அதை கொண்டாடும் ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விடுவேன். தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வரும். எனவே மூன்று மாதங்கள் பண்டிகை கொண்டாட்டங்களிலேயே நான் இருப்பேன் என்றார்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..