இது அல்லவா குட் நியூஸ்..! பாராட்டில் மூழ்கும் வேலூர் மாவட்ட ஆட்சியர்..!!
வேலூர் ஓட்டேரி ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் ஓட்டேரி ஏரியில் பாமக 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் தலைமையில் சுற்றுசூழலை பாதுகாக்கவும் நிலத்தடி நீர் பெருகவும் மண் வளம் பெருகவும் வேண்டி 5 ஆயிரம் பனைவிதைகள் நடும் விழாவானது நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பனைவிதைகளை நட்டு துவங்கி வைத்தார் இதில் ஆர்வமுடன் மாணவர்கள் மாணவிகளும் பங்கேற்று பனை விதைகளை நட்டனர் இதன் மூலம் மண் வளம் பெருகும் மண் அரிப்பும் தடுக்கபடும்.
பின்னர் ஓட்டேரி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மகளிர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
Discussion about this post