கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஆட்சியர்கள் செய்த அசத்தல் செயல்..!!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனடைய கூடிய பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் விண்ணப்பங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி ஆய்வினை மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனடைய கூடிய விண்ணப்பம் பதிவு செய்துள்ள பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்களின் உண்மை தன்மை குறித்து அறிந்து கொள்ளும் விதமாக,
விண்ணப்பதாரரை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி ஆட்சியர் திடீரென கள ஆய்வினை மேற்கொண்டார். மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனடைய கூடிய பயனாளி பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பயனாளிகளான பெண்களை பார்வையிட்டு அவர்கள் விண்ணப்ப செய்துள்ள படிவகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனவும் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா என ஆட்சியர் நேரடி கள ஆய்வு விசாரணை செய்து, அறிந்து கொண்டார்.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..