செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு இது தான் காரணமா..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது.., போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி அதாவது 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை. 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொறியாளர்கள் பணி நியமானத்தின் போது சில முறைகேடுகளை செய்துள்ளார்.
பணம் வாங்கி கொண்டு வேலை கொடுக்க மறுத்து விட்டதாக அவர்மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த புகாரை 2015ம் ஆண்டு தேவசகாயம் அளித்துள்ளார். எனவே புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார்.
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மைத்துனர் கார்த்திக் உட்பட 40பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை சம்மனை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. செந்தில் பாலஜி மீது இருக்கும் பழைய வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த ஆணையிட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனுமை அமலாக்கதுறையினர் ரத்து செய்ததால் அவர்களையும் விசாரிக்க கோரி உச்சநீதி மன்றம் மனுவை மேல்முறையீடு செய்தது. காவல்துறையினர் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததால்,
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டது. கடந்த மே 16ம் தேதி வழக்கை மேல்முறையீடு செய்யக்கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகளான கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியம் 2 மாதங்களுக்கு முன்பே வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவுவெளியானது . எனவே அதன் பெயரில் அவரை கைது செய்து விசாரணை நடத்த புலனாய்வுதுறை நேற்று செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டது.
கைது செய்ய சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.