மருத்துவமனையில் செந்தில்பாலாஜியுடன் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கிதருவதாக கூறி, பணமோசடி செய்த வழக்கில் நேற்று இரவு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துமனைக்கு வெளியே அமைச்சர்களும் முகம் அமைத்து அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்த தகவலை கேட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துமனைக்கு சென்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து.., ஆறுதல் கூறியுள்ளார். ஆறுதல் கூறிவிட்டு மருத்துவர்களிடம் உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
பின் இதுகுறித்து பேசிய முதலமைச்சர். எங்களுடன் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலம் எங்களுக்கு எதிராக செயல்படும். பாஜகவை பழிவாங்கும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் இதுபோன்ற செயல்கள் தான் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.