இந்திரா காந்தியின் கனவு இதுவா..? ராகுல் காந்தி சோனியாகாந்தி அரசியல் பக்கம்..!!
உண்மையான தேச பக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும், இந்த பதிவை முழுமையாக படித்து விட்டு, அடுத்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லட்டும். அது இந்திரா காந்தியின் கடைசி காலங்கள். அவருக்கு உச்சக் கட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது.
ஆனால் அதற்காக இந்திரா காந்தி கலங்கவில்லை, என்றேனும் ஒரு நாள் தான் கொல்லபடுவோம் என்பதை அவர் தெரிந்தே இருந்தார். பொற்கோவில் சம்பவத்திற்கு பின்
“இந்திரா வம்சத்தை வேரறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர்.
அவர்கள் மட்டுமின்றி இன்னும் பல அமைப்புகளும் இதே மிரட்டலை விடுத்தன. வாழ்வில் முதன் முதலாக இந்திரா காந்தி அஞ்சினார். தன் வாரிசுகள் மீதான கவலை இந்திரா காந்திக்கு அதிகரித்தது. சஞ்சய் காந்தியின் மகன் வருண் காந்திக்கு எந்த ஆபத்தும் இல்லை. காரணம் அவரின் தாய் மேனகா காந்தி சீக்கிய பெண்மணி.
மேலும் மேனகா காந்தி எப்போதுமே, இந்திரா காந்தியுடன் நல்ல நட்புறவில் இருந்ததே இல்லை. அதனால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ராஜீவ் காந்தியின் குழந்தைகள் அப்படி அல்ல.

இந்திரா காந்தி உயிரையே வைத்திருக்கும் அந்த குழந்தைகள் மேல் அடி விழுந்தால், அவரால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது என்பது எதிரிகளுக்கு நன்றாக தெரியும். எதிரிகள் அந்த இடம் பார்த்து தான் அடிப்பார்கள் என்பதையும் இந்திரா காந்தியும் உணர்ந்தே இருந்தார்.
அதன்பின் இந்திரா காந்தி இடம் ஒரு வித பதட்டம் காணப்பட்டது. பல்வேறு உளவு தகவல்கள் தான் அதற்கு முக்கிய காரணம். திடீரென பேரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி செல்லும் இந்திரா காந்தி, பேரப் பிள்ளைகளை கட்டி பிடித்து அழுவார்.
திடீரென தன் பயண திட்டத்தை மாற்றி விட்டு பேர பிள்ளைகளிடம் ஓடுவார். அவர்கள் நலமாக இருக்கின்றார்கள் என்றதும் ஒருவித நிம்மதி அவரிடம் வெளிப்படும். நள்ளிரவில் கூட தூங்கி கொண்டிருக்கும் பேரப் பிள்ளைகளின் தலையினை கோதி கண்ணீர் விட்ட இந்திரா காந்தியை கண்ட சாட்சிகள் பல உண்டு.
நாட்கள் சென்று கொண்டிருந்தன. தன்னை கொல்வார்களா..? அல்லது தன் வம்சத்தை ஒழித்து தன்னை கதற வைத்து பழி வாங்குவார்களா..? என நிம்மதியின்றி அவர் தவியாய் தவித்தார். உளவியலாக தொடுக்கப்படும் நெருக்கடி இது.
அந்த தாய் அந்த நெருக்கடியை அணுஅணுவாக அனுபவித்து வேதனை அடைந்தார். இறுதியில் அவரின் விதி தான் முந்திக் கொண்டது. ஆம். அந்த குழந்தைகளுக்கான ஆபத்து அப்போதைக்கு தற்காலிகமாக நீங்கியது.
அடுத்து ராஜீவ் காந்தி வந்தார். அமைதிப் படையின் யுத்தத்தை அடுத்து, புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் மவுன யுத்தம் ஆரம்பித்தது. இந்திராவிற்கு இருந்த அதே கவலை ராஜீவ் காந்திக்கும் இருந்தது.
அதன் பின் ஒரு நுட்பத்தை ராஜீவ் காந்தி மேற் கொண்டார். எங்கு சென்றாலும் குடும்ப சகிதமின்றி தனியாக செல்ல தொடங்கினார். கொல்பவர்கள் தன்னை மட்டும் கொல்லட்டும்.
அந்த குழந்தைகள் வாழட்டும் எனும் ஒருவித தியாகம் அதில் இருந்தது.. அப்படியே ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், அந்த குழந்தைகளை காப்பாற்றி விட்டே தங்களின் இன்னுயிரை துறந்தனர்.
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், பிறந்தது முதல் இன்று வரை பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். பாட்டியும் தந்தையும் தங்களை காக்க உயிர் விட்டதை கண்ணால் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள்.
அவர்களுக்கான மிரட்டல் சாதாரண மிரட்டல் அல்ல. நினைக்கவே மனம் பதறும் விஷயம் அது. ஆனால் அதையும் தாண்டி விதி அவர்களை அரசியலுக்கு இழுத்து வந்திருக்கின்றது.
நிச்சயம் சோனியாவிற்கு இவர்கள் அரசியலுக்கு வருவது விருப்பமான விஷயமே அல்ல. அவர்களை ஒதுக்கித்தான் வைத்திருந்தார். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்றும் கருதினார்.
ஆனால் பலவீனமான காங்கிரஸை வலுப்படுத்த அவருக்கு வேறு தெரிவு இல்லை. அழுத படியே ராகுலுக்கு தலைவர் பதவியினை அவர் விட்டுக் கொடுத்த பொழுது உலகில் கலங்காதோர் யாருமில்லை.
அதில் எந்த வாரிசு அரசியலோ, அல்லது பதவி ஆசையோ இல்லை. அந்த அழுகையின் உண்மையான காரணத்தை நல்ல இந்தியர்களும், நல்ல காங்கிரஸ்காரர்களும் நிச்சயம் அறிவார்கள்.
பாஜகவின் அசுர பலத்தை ஒடுக்கவும், மாநில கட்சிகளின் அழிச்சாட்டியத்தை விரட்டவும்,
ராகுல் காந்திக்கு இன்னொரு கரம் தேவைபட்டது. அதன் பிறகுதான் பிரியங்கா காந்தியும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார். அவருக்கு கனத்த வரவேற்பும் இருக்கின்றது.
நிச்சயம் இவர்களால் காங்கிரஸ் வலுப் பெறும் எனும் நம்பிக்கையும் துளிர் விட்டிருக்கின்றது. தங்களின் பாட்டியும் தந்தையும் இந்த தேசத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்டதை பார்த்த பின்னும் நாட்டிற்காக வந்து நிற்கும் இருவரும் வாழ்த்துக்குரியவர்கள். போற்றப்படக் கூடியவர்கள்.
வேறு எந்த கட்சியிலும் இப்படிபட்ட ரத்த சாட்சிகளை பார்க்க முடியாது. நிச்சயம் முடியாது. “உன்னால் முடியாததை, உன் ரத்தம் சாதிக்கும்” -இது மேலை நாட்டு பழமொழி. திட்டமிட்டு சரிக்கப்பட்ட அந்த ஆல மரங்களின் இடத்தை இந்த குருத்துக்கள் வளர்ந்து நிரப்பட்டும். நமது மதச்சார்பற்ற தேசம் அதில் இளைப்பாறட்டும்.
இந்திரா காந்தி விட்டு சென்ற காரியங்கள் :
சிங்கங்கள் விட்டு சென்ற இந்த இளம் குருத்துக்களின் கர்ஜனையில் எதிரிகள் ஓடட்டும். இந்திரா காந்தி விட்டு சென்ற காரியங்களை இந்த இருவரும் சாதித்து காட்டட்டும். இந்த தேசம் அதற்கு கை கொடுக்கட்டும்.
பிரியங்கா காந்தி வருகைக்கு பின், பாஜக கும்பல் கதறுவதையும், பதறுவதையும், கண்டால் நேருவின் அழகான சிரிப்பு தெரிகின்றது. நல்லவர்கள் ஒருநாளும் மரிப்பதில்லை.
அவர்களின் கனவு நடக்காமல் போவதில்லை. நேரு கண்ட அமைதியான இந்தியா, இந்திரா காந்தி கண்ட வலிமையான இந்தியா, ராஜீவ் காந்தி கண்ட தொழில்நுட்ப இந்தியா, மீண்டும் அமையும் காலம் நெருங்கி கொண்டிருகின்றது என்பது மகிழ்ச்சியே.
இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், வாழாத நாட்களை எல்லாம் இவர்கள் வாழட்டும். அவர்கள் கண்ட கனவுகளை எல்லாம் இவர்கள் நிறைவேற்றட்டும். இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், ஓடி ஓடி ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும், காப்பாற்றியது,
இந்த நாடு நலம் பெற, வளம் பெற, வலிமை பெற, என இருவரும் நிரூபிக்க காலம் வாய்ப்பளிக்கட்டும். அல்லரை சில்லரை யூடியூப் விபச்சாரகர்களை பற்றி அவர் ஒன்றும் அறியாதவர் அல்ல.
அதிகாரம் கையில் இருக்கின்றது என்ற மமதையில், எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட அவர் ஒன்றும் பாதம் தாங்கி, டயர் நக்கி இந்த உயரத்துக்கு வந்தவரல்ல.
எந்தனை விழுப்புண்கள். எத்தனை முதுகில் குத்திய துரோகிகள். அனைத்தையும் தாண்டி நிற்கின்றார். இப்போதும் அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த மத துவேஷ சங்பரிவார கும்பல் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நன்கு அறிந்து,
ஒவ்வொன்றையும் சட்டத்தின் மூலமாகவே வெற்றி கொள்கிறார். வாக்களிப்போம் காங்கிரஸ் கூட்டணிக்கு.
இந்தியாவின் மூன்றாவது தலைமை அமைச்சரான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி காலை புது டெல்லியில், சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற அவரது இரு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அனைவரிடமும் பேர் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..