சென்னை சென்ட்ரலில் வெடிகுண்டா..? பயணிகளே உஷார்..!!
நேற்று இரவு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்று காவல் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தியுள்ளனர்.
நீண்ட சோதனை நடத்திய பின் எந்த தகவலும் கிடைக்காததால்.., காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வந்த எண்ணை டிராக் செய்துள்ளனர். இந்த தகவல் உண்மை தகவலா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்த கால் வந்து இருக்குமோ என்ற நோக்கில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சோதனையில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல் கிடைத்துள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவல் கொடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பெயரில் மணிகண்டனிடம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..