தக்காளி விலை குறைவு..! வெங்காயம் விலை அதிகரிப்பு..! அதிர்ச்சியில் மக்கள்..!
பெரிய வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒன்றிய அரசு தற்போது வெங்காயத்தை 3 லட்சம் டன்னில் இருந்து ஐந்து லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை அதிகரித்து மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது அதன் தொடர்ச்சியாக இன்று வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது.., தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 37 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை மாற்றம் கண்டு தமிழ்நாடு ஒன்றிய அரசு வெங்காய இறக்குமதியை 2.5லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.., எனவே ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 25க்கு கிடைக்கும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இதை பற்றி வேளாண் விற்பனை அமைப்பிடம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Discussion about this post