தல 63 படத்தில் இவங்க தான் ஹீரோயினா..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.., இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போ எங்கே நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கும் போது ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் தல அஜித்தின் 63வது படமான குட் பேட் ஹக்லி படத்தின் டைட்டில் வெளியானது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
காரணம் அஜித் படம் என்றாலே கால தாமதம் தான் என ஒரு சிலர் சொல்லுவார்கள் அவருக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
குட் பேட் ஹக்லி படக்குழுவின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உதவியாளரை நம் மதிமுகம் தொடர்பு கொண்டு பேசிய போது படத்தின் சில அப்டேட்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
தல அஜித் உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகைக்கு தான் ஆசை வராது.., அதற்கு காரணம் அவர் ஜென்ட்டில் மேனாக நடந்து கொள்வதும்..,
ஷூட்டிங்கில் அனைவருக்கும் சமைத்து கொடுப்பதும் தான்.., இன்னும் சொல்ல போனால் அஜித்தின் சமையளை சாப்பிடுவதற்காவே அவருடன் ஒரு காட்சி நடிக்க கூப்பிட்டாலும் உடனே ஓகே சொல்லுவார்கள்.
அப்படி இருக்கும் போது ஸ்ரீலீலா மட்டும் என்ன வேண்டாம் என்றா சொல்ல போறாங்க.., ஆம். ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் குட் பேட் ஹக்லி படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடிக்க இருக்கும் ஹீரோயின் ஸ்ரீலீலா.
தெலுங்கில் புகழ் பெற்ற நடிகையான ஸ்ரீலீலா தமிழில் கிஸ், பாராதே, பெல்லி சண்டாடி, பை டூ லவ் என நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.,
ஆனால் தமிழில் இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை எனவே தற்போது ஸ்ரீலீலா குட் பேட் ஹக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் அஜித் 3 கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.., தெலுங்கில் பட்டைய கிளப்பும் நடிகை ஸ்ரீலீலா நடிகர் அஜித்துடன் தற்போது இந்த படத்தில் இணைந்து இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.