லிச்சி பழம் குழந்தைக்கு ஏற்றதா..? ஆபத்தானதா..?
லிச்சிப்பழம் சாப்பிட்டு 2019 ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் 120 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். பீகாரில் உள்ள 40 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் உள்ள குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு 140 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அந்த சம்பவம் சோகத்தை கொடுத்தாலும், பலரையும் அச்சப்பட வைத்தது.
அன்று முதல் இன்று வரை பலருக்கும் இருக்கும் கேள்வி குழந்தைக்கு லிச்சி பழம் கொடுக்கலாமா..? என்று தான்.
லிச்சிபழம்; சீனா, வங்கதேசம், மற்றும் தென்கிழக்கு ஆசிய போன்ற பகுதிகளில் விளையக் கூடியவை.., இந்தியாவை பொறுத்தவரை பீகார் மாநிலத்தில் தான் அதிக விளைச்சல் கொடுக்கும். அங்குள்ள குழந்தைகள் கீழே விழுந்த பழங்களை சாப்பிட்டு தான் உயிர் இழந்துள்ளார்கள் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
லிச்சிபழம் கோடை காலத்தில் தான் விளைச்சல் கொடுக்கும், கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் பெற்றோர்கள் அவர்களுடனே குழந்தைகளை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
சாப்பிடுவதற்கு லிச்சி பழமும் கொடுத்துள்ளார்கள். இதனால் குழந்தைகள் உணவிற்கு பதில் அதை, அதிகம் சாப்பிடவே இரவும் சாப்பிடாமல் உறங்கி இருக்கின்றனர். இது தொடர்ச்சியாக நடந்ததால்.
“மெத்தலின் சைக்ளோ புரோபைல் கிளைசின்” என்ற நச்சுப்பொருள் உடலுக்கு சென்று குழந்தைக்கு உயிர் போவதர்க்கு காரணமாக இருந்துள்ளது.
* லிச்சி பழத்தை காயாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது, பழமாக தான் கொடுக்க வேண்டும்.
* இரவு தூங்குவதற்கு முன் லிச்சி பழத்தையோ, ஜூஸ் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தாலும் அதற்கு பின் சாப்பிடுவதற்கு வேறு ஏதாவது கொடுக்க வேண்டும் ..
* 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு லிச்சி பழம் கொடுப்பது நல்லது.
என மருத்துவர் சிவராம கண்ணன் கூறினார்.
-வெ.லோகேஸ்வரி