வீட்டில் கிளி வளர்ப்பது நல்லதா..? கெட்டதா..?
கிளி வீட்டில் வளர்க்கும் ஒரு செல்ல பிராணி என்பதை தாண்டி.., மீனாட்சி அம்மன் கையில் இருக்கும் ஒரு அழகிய பறவை என சொல்லலாம்.
இதனாலே கிளியை பலருக்கும் பிடிக்கும்.., கிளியை வீட்டில் வளர்ப்பது மீனாட்சி அம்மன் நம் வீட்டில் வாழ்வதற்கு சமம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கிளி வளர்ப்பது நல்லது. அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அது வீட்டில் நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.
அதாவது வீட்டில் கிளியை வளர்ப்பதனால் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்.
கிளியின் குரல் வீட்டில் ஒளித்து கொண்டு இருப்பதால் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.
அதாவது வீட்டில் உள்ள தீய வினைகளை நீக்கி நற்வினைகளை கொடுக்கும்.
எந்த திசையில் வைக்க வேண்டும் :
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடக்கு அல்லது கிழக்கு திசையில் கிளியை வைக்க வேண்டும்.
வடக்கு திசை :
வடக்கு திசையில் நாம் வைப்பதானால் புதன் கிரகத்தின் திசையாக கருதப்படுகிறது.
புதன் திசையானது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு திறனை கொடுத்து.., மேலும் அறிவைவாற்றளையும் அதிகரிக்கும்.
கிழக்கு திசை :
கிழக்கு திசை சூரிய பகவானின் திசையாக கருதப்படுகிறது, இது சக்தி மற்றும் வெற்றியின் அடையாளமாகும்.
இந்த திசையில் கிளியை வைத்திருப்பது வீட்டிற்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது.
மேற்கு தெற்கு திசை :
கிளியை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இது மரணம் மற்றும் எதிர்மறையின் அடையாளமாகும். மேற்கு திசையானது ராகு கிரகத்தின் திசையாக கருதப்படுகிறது, இது அமைதியின்மை மற்றும் பிரச்சனைகளை குறிக்கிறது.