விஜயலட்சுமியிடம் கல்யாண போட்டோவை கேட்ட சீமான்!!
கோவையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேசியக் கட்சிகள் மட்டுமல்லாமல் திராவிடக் கட்சிகளுடனும் எந்த காலத்திலும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டேன். ஆனால், ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் நான் போட்டியிலிருந்து விலகி திமுகவிற்கு ஆதரவளிப்பேன் என பேசினார்.
மேலும், என்னைப் பற்றி விமர்சிக்க விஜயலட்சுமிக்கு எந்த தகுதியும் இல்லை , நான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டது உண்மையென்றால். விஜயலட்சுமி, புகைப்படமோ அல்லது திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரமோ வெளியிட சொல்லுங்கள், அதற்கு நான் பதில் அளிக்கிறேன் என மேடையிலேயே சவால் விட்டுள்ளார்.
Discussion about this post