தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் இவரா..?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் யார் என்பது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடப்படும் எனவும்.., இதனால் காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி தேர்வு செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி தலைமையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை தமிழக காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
கட்சியின் விதிமுறை படி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஆட்சிக்காலம் முடிவடைந்துள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
தலைவர் பதவியில் ஆர்வம் காட்டிய கரூர் எம்.பி.ஜோதிமணி செல்லகுமார், உட்பட பல தலைவர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் டெல்லி தலைமையில் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் தேர்தலை கர்நாடக மாநில அரசு தள்ளிவைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்.., என கட்சியின் மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதால் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு தலைவர் நியமானம் செய்யப்பட இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, செல்லக்குமார், சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..