இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சினையா..? இனி கவலையே வேண்டாம்..!! இதை ட்ரை பண்ணுங்க..!!
நரைமுடி பிரச்சினை இளம் வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவது, அதனால் புற்றுநோய் ஆபத்து வரும் நிறைய ஆபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
சரி..! அப்போ நரை முடி வராமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். அதற்கு தலைமுடி பராமரிப்பில் சில மாற்றங்கள், நம்முடைய உணவுமுறை, வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் சில மாறுதல்கள் செய்வதன் மூலம் இளம் வயதிலேயே நரைமுடி வருவதை நம்மால் தவிர்க்க முடியும்.
இளம் வயதிலேயே நரைமுடி உண்டாவதற்கு ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, அதிக ரசாயனங்கள் கலந்த பொருள்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அவற்றை சரிசெய்தாலே ஓரளவிற்கு நரைமுடி இளம் வயதில் வராமல் தடுக்க முடியும். அவற்றை தவிர கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நரைமுடி வராமல் தடுக்க முடியும்.
நரைமுடி கொறஞ்சு இயற்கையாவே கருப்பாக மாறணுமா? உங்களுக்கு தான் இந்த 7 டிப்ஸ்…
1. தினமும் ஷாம்பு பயன்படுத்துதல் :
தினமும் தலைக்கு குளிப்பதில் தவறில்லை. ஆனால் தினமும் ஷாம்பு தேய்த்து குளிப்பது மிகவும் தவறு. அப்படி நீங்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்துபவராக இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். வாரத்திற்கு இரண்டு முறை அதிகபட்சமாக மூன்று முறை ஷாம்பு பயன்படுத்தலாம்.
அதேபோல கெமிக்கல் அதிகமுள்ளள ஷாம்புவிறகு பதிலாக ஹெர்பல் ஷாம்புகளை தேர்வு செய்யுங்கள். அதில் பாரபீன், சிலிகான் உள்ளிட்ட தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் குறைவாக இருக்கும்.
2. நேச்சுரல் ஹேர் டை :
தினமும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது. வெள்ளை முடியோடு போக முடியாது. அதனால் கட்டாயம் ஹேர் டை பயன்படுத்தியே ஆக வேண்டுமென்றால் கடைகளில் விற்கும் அமோனியா உள்ளிட்ட கெமிக்கல் கலந்த ஹேர் டைக்கு பதிலாக நேச்சுரல் ஹேர் டை பயன்படுத்துங்கள்.
மருதாணி, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி உள்ளிட்ட மூலிகைகள் கொண்ட நேச்சுரல் ஹேர் டை நீங்களே வீட்டில் செய்தும் பயன்படுத்தலாம். அதோடு சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்துப் பயன்படுத்தும் போது முடி வறட்சி ஆகாமலும் தடுக்க முடியும்.
3. நேச்சுரல் கன்டிஷ்னர் :
தலைமுடிக்கு கண்டிஷ்னர் மிக அவசியம். அது தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி வறண்டு போகாாமல் மாய்ஸ்ச்சராக இருக்க உதவி செய்யும்.
முடி மாய்ஸ்ச்சராக இருக்கும் போது தலைமுடிக்கு பளபளப்பும் கிடைக்கும். இதுவும் ஷாம்பு போல தான். கெமிக்கல் கலந்த கண்டிஷ்னரை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்பூன் வால்நட் கொட்டை ஓட்டின் பொடியும் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியும் சேர்த்து சிறிது எசன்ஷியல் ஆயில் சேர்த்து கலந்து தலைமுடியில் அப்ளை செய்து 20 நிமிஙடகள் கழித்து அலசி வர முடி பளபளப்பாக மாறும்.
– நிரோஷா மணிகண்டன்
Discussion about this post