என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்கில் உண்மையில்லை என ஆந்திர முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர். இந்நிலையில் இவர் முதல்வராக இருக்கும் போது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. அந்த புகார்கள் மீது உண்மை முகாந்திரம் இருப்பதன் பேரில் இன்று காலை 6 மணியளவில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலுக்குள் விரைந்தனர்.
அப்போது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எவ்வாறு கைது செய்வீர்கள் என்று சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு பதிவுகள் மற்றும் எஃப் ஐ ஆர் நகல்களை காண்பிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. ரிமாண்ட் ரிப்போர்ட்டை கொடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்து அவரை கைது செய்து இழுத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு,
என்னை கைது செய்தது அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை . வழக்கை திசை திருப்புகின்றனர் . சட்டப்படி வழக்கு விசாரணையை சந்திப்பேன். என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை; கட்சியினர் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என தெரிவித்தார்.உ
Discussion about this post