சூப்பர் ஸ்டார் நடித்து கடந்த 2002ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் மீண்டும் 20 வருடங்கள் கழித்து ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தில் சில காட்சிகளில் மாற்றம் செய்ததுடன் அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வகையில் முடித்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாபா திரைப்படம் ரஜினி திரைப்பட வாழ்க்கையில் ஒரு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் ரஜினியின் மனதோடு நெருங்கிய படமாகவும் இருந்தது இதனால் அவன் பிறந்த நாளை முன்னிட்டு பாபா படத்தை காலத்திற்கு ஏற்ற வாறு சில மாற்றங்களை நிகழ்த்தி ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். இதனால் பாபா படத்தின் ரீரிலீஸ் வேலைகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பாபா திரைப்படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகியது. கடும் மழையையும் பொருட்படுத்தமால் படத்தை காண ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இப்படத்தில் முன்னதாக இருந்த பல விஷயங்களை மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளனர். அதில் 7 மந்திரங்களாக இருந்ததை 5 மந்திரங்களாக குறைத்துள்ளனர். பல அரசியல் வசனங்களையும் குறைத்து கிளைமாக்ஸில் முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளனர். இந்த காலத்தில் அதிகமாக அம்மா சென்டிமென்ட் காட்சிகள் வெளிவந்து வென்றுள்ளது. அதே போல் இந்த படத்தில் இறுதியில் அம்மா செண்டிமெண்ட் காட்சிகள்,வசனங்கள் சேர்க்கப்பட்டு பாபா படத்தின் 2ம் பாகத்திற்கு அடிபோட்டுள்ளனர். முதலில் வந்த பாபா படத்திற்கு விட ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாவே உள்ளது.
தற்போது ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பாபா 2 படத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இதுவே அவரது கடைசி படமாகவும் இருக்க கூடும் என்று தெரிகிறது.