கத்தி முனையில் மிரட்டல்..! முக்கிய சாலையில் நடந்த பரபரப்பு செயல்..!
சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்தவர் நாவியப்பன் 38 வயதான இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் (ZOMATO ) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று உணவு டெலிவரி செய்வதற்காக ஓஎம்ஆர் சாலை பெருங்குடி அருகே சென்றுக் கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் வழிமறித்து அவசரமாக எங்களுடைய வீட்டிற்கு கால் செய்ய வேண்டும் என சொல்லி செல்போனை கேட்டுள்ளனர்.
அப்போது மற்றொரு இளைஞர் இருசக்கர வாகனத்தை ஆன் செய்து சிறிது தூரம் அருகே நின்று கொண்டிருந்து திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த டெலிவரி பாய் நாவியப்பான் செல்போனை தர மறுத்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த 2 அடி நீலமுள்ள கைத்தியை எடுத்து அவரை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை (1 ½) சவரன் தங்க செயினை கத்தி முனையில் பறித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆன்லைன் டெலிவரி செய்யும் நாவியப்பன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனே ஆங்காங்கே வாகன தணிக்கையில் இடுபட்டனர்.
அப்பொழுது நாவியப்பன் கூறிய அடையாளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீசார் வாகனத்தை மடக்கி விசாரித்த போது செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் தப்பி சென்றுள்ளார்.
பின்னர் போலீசார் பிடிபட்ட இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எட்டு அடுக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(19) என்பதும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து தப்பி சென்றது 17 வயது இளஞ்சிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
அதை தொடர்ந்து கத்தி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சுரேஷிடமிருந்து 1 கத்தி, 2 தங்க மோதிரம், 1 வெள்ளி சயின், மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்று ஆன்லைன் டெலிவரி செய்யும் நபரிடம் வழிப்பறி செய்த ஒன்றரை (1 ½) சவரன் தங்க செயினை உள்ளிட்டவைகளை போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் மேலும் சுரேஷ் முன்னதாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு எதேனும் காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ