வங்கிகளின் வாராக்கடன் நீக்கம்..! ஒன்றிய அரசு அறிவிப்பு…!!
நடப்பு நிதியாண்டின் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கணக்கு பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
வாராக்கடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வசூலிக்க முடியாவிட்டால் கணக்கு பதிவில் இருந்து நீக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. வங்கிகளின் நிர்வாக காரணங்களுக்காக கணக்கு பதில் இருந்து நீக்கப்படுவது கடன் தள்ளுபடியாக கருதப்படாது என்றும் இதுவரையில் 37 ஆயிரத்து 253 கோடி வாராக்கடன் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் அளித்திருந்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் பாரத ஸ்டேட் வங்கி 8 ஆயிரத்து 312 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 8 ஆயிரத்து 61 கோடியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா 6 ஆயிரத்து 344 கோடியும், பாங்க் ஆப் பரோடா 5 ஆயிரத்து 925 கோடியும் கடன் கணக்குப் பதிவில் நீக்கப்பட்டுள்ளதாகவும்., அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருந்து 42 ஆயிரத்து 35 கோடி கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..