கடந்த 8 மாத காலமாக உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையில் போர் நடைபெற்றுவருகிறது. இதனால் அங்கு பல உயிரசேதங்களும்,பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரஸ்யா போரை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் ரஸ்யா தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் உக்ரைன் வாழ் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் போர்ச்சூழல் மோசமான நிலையில் இருப்பதால் தற்போது யாரும், உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.ரசியா-உக்ரைன் போரால் பெருமளவில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இப்போரினால் இரு தரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டு உள்ளதால் பல உலக நாடுகள் போரை நிறுத்த கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.