சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் திரைபடம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அப்படத்தின் காட்சிகளை நீக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.நாளை சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இப்படம் தீபாவளி ரிலீசாக வரவுள்ளது. இந்த திரைபடம் அவருக்கு முதல் தீபாவளி ரிலீஸ் படம் என்பதால் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.
இந்நிலையில்தான் சிவகார்த்திகேயன் , பிரின்ஸ் டீம் படத்தின் பைனல் அவுட்-டை பார்த்துள்ளனர் அதில் சில காட்சிகள் சலிப்பை தரும் வகையில் இருப்பதால் 11 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்தில் கோப்ரா போன்ற சில படங்கள் மூன்று மணி நேரம் படமாக வெளியிடபட்டு அதன் பின் காட்சிகள் குறைக்கப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. .