“இந்தியாவின் இரும்பு பெண்மணி.. ” இந்திரா காந்தி கடந்து வந்த அரசியல் பாதை..!
1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்று, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, மாநில உரிமைகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 21 மாதங்களில் அவசரக்கால நிலையை நடைமுறைப்படுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவில் குறிப்பிட்டு இருப்பதாவது, போர் காலங்களிலோ அல்லது அந்நிய நாட்டுப்படை இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும்போதோ, அதுபோன்ற சூழல் இல்லை உள்நாட்டுக்குள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி முயற்சி செய்தாலோ, நாட்டின் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்பட்டாலோ, அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு..
கருப்பு வரலாறு :
அப்படி எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத போது இந்திரா காந்தி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எமெர்ஜென்சியை என்ற ஒன்றை கொண்டு வந்தார். எனவே தான், அந்த நெருக்கடி நிலையை இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு வரலாறு என சொல்லப்படுகிறது…
இந்திய பிரதமர் :
கடந்த 1966ம் ஆண்டு முதல் மார்ச் 1977ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.. அதன் பின்னர்
அதன் பின்னர் 1980ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்தார்.. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த போது தன்னுடைய பாதுகாவலர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார்..
அரசியலில் இவரின் செயலை பார்த்து.. “இந்தியாவின் இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்…
இன்று அவரது 40ம் ஆண்டு நினைவுநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்., காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திராகாந்தி அவர்களது பேரனுமான “ராகுல் காந்தி” தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் – இந்தியாவின் இந்திரா.. !
பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும்… என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..