ஒன்றிய அரசு மசோதாவிற்கு இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு..!!
வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன…
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழிய பட்டுள்ளது.
வஃக்பு சட்டத்திருத்த மசோதா அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பு, மத சுதந்திரம் மீதான தாக்குதல் என காங்கிரஸ் கட்சி எம்.பி., வேணுகோபால் தெரிவித்தார். மேலும் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
இந்த வஃக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது என தெரிவித்தார்..
இந்த வஃக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் உள்நோக்கத்தோடு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அன்னியர்களை போல் காட்டும் முயற்சி மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும் என தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..