அமெரிக்க பெண்ணை கொலை செய்த இந்தியர்..!! விசாரணையில் வெளிவந்த திடுகிடும் தகவல்கள்..!!
அமெரிக்காவில் நேபாள மாணவியை சுட்டு கொலை இந்தியர் கைது …….
நம் அண்டை நாடான நேபாலத்தை சேர்ந்தவார முனா பாண்டே 21. இவர் கடந்த 2021 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படிக்க சென்றார். இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டண் நகரின் அடுக்கு குடியிருப்பில் தங்கி படித்து வந்தார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி மூணா பாண்டே அவரது வீட்டில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தை பார்த்த அவரது நண்பர்கள் போலீஸில் புகார் அளித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் மூணாவின் வீட்டில் இருந்து வெளியேறியதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போலீசார் வெளியிட்ட நிலையில் வடமேற்கு ஹூஸ்டனில் உள்ள ஒரு இடத்தில் அவர் பாதுங்கிஇருக்கும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் பாபி சிங் ஷா 52, என்பதும் இந்திய வம்சாவழியை சேர்ந்த நபர் என்பதும் தெரிய வந்தது.
கைதான பாபி சிங் சாவிடம் விசாரணை நடைத்தியதில் மூணாவின் வீட்டில் கொள்ளையைக்க சென்றபோது அவரை சுட்டுக்கொன்றதாக குறிப்பிட்டார். இதையாடுத்து பாபி சிங் சாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.