மூன்று டி20 போட்டிகளை கொண்ட இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி இரண்டாவது போட்டி புனேவில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்த வாரம் மும்பை வான்கடேவில் முதல் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து புனேவில் இரண்டாவது போட்டி தொடங்கவுள்ளது. மேலும், இந்த போட்டியை இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் வருடத்தின் முதல் தொடரை வெல்லும். மேலும் இந்த போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தொடரில் நிலைத்து இருக்க இலங்கை அணியும் வெற்றிக்கு கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் எதிரபார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முந்தைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,இவருக்கு பதிலாக 29 வயதான ஜிதேஷ் சர்மா அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த ஆண்டு தொடர்ந்து பல தொடர்களில் விளையாடவுள்ளதால் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post