டி 20 உலக கோப்பை தொடரில் இந்தியா அணி அரையிறுதியில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அதை தொடர்ந்து ஹர்டிக் பாண்டிய தலைமையில் நியூ ஸீலாந்து எதிராக விளையாட சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக இந்தியா அணியில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபட்டு வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது இதை தொடர்ந்து நேற்று இரண்டாம் டி 20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது ஆகையால் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரிசப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் இறங்கினர்.
பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் வெளியேறினார். பின் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யா குமாரின் சிக்ஸர் மழையில் 49 பந்துகளில் சத்தம் அடித்து அசத்தினார். நியூஸிலாந்து பந்து வீச்சாளர் டிம் சௌதீ பாண்டிய,வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஆஜியா மூவரின் விக்கெட்டால் ஹாட்ரிக் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 191 ரன்கள் குவித்தது சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 192 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூஸிலாந்து அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 18.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதில் கென் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணியில் பந்துவீச்சு சார்பாக தீபக் ஹூடா 4 விக்கெட் மற்றும் ,சிராஜ் ,சாஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர.
3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா அணி முதல் வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை வகுக்கிறது. இருப்பினும் இரு தரப்பு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து உலக கோப்பை தொடர்களில் சொதப்பி வரும் இந்தியா அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.