வடகொரியா சமீபகாலமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் வடகொரியாவின் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தியது இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாடா கொரிய அதிபரான கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனை பல உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வரும் நிலையில் ஜி 7 நாடுகள் வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு வாடா கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்,
அவர் கூறுகையில், வடகொரியா நாட்டிற்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்தால் அதே அணு ஆயுதங்களை வைத்து தக்க பதிலடி கொடுப்போம் என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வாடா கொரியாவிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகளில் உள்ள வெளியுறவு துறை அமைச்சர்கள் கூறியுள்ளனர்.