அதிமுக பொதுக்குழு குறித்தான வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுகுழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு செய்திருந்தார். ஆகையால் அந்த மனுவிற்கு பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டது.
அதற்கு பதிலளித்த பழனிசாமி, அதிமுக பொதுக்குழு முறைப்படி நடத்தப்படவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் குறை சொல்வது உண்மையில்லை, தீர்மானங்களை எதிர்த்து அவரை கேள்வி கேக்க முடியாது எனவே அவரின் மேல்முறையீடை ரத்து செய்ய வேண்டும் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இரு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்து, இன்று விசாரணையில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
தலைமை பொறுப்பிற்காக இரு தலைவர்களும் சண்டை போட்டு வருவதால் தொண்டர்கள் சோர்வடைந்து வருகின்றனர்.
Discussion about this post