திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொறுப்பை முகேஷ் அம்பானி ஏற்று, 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற விழா மும்பையில் நடைபெற்றது
உலகின் பல பகுதிகளிலும் நிச்சயமற்ற தன்மையும், பின்னடைவும் காணப்படும் சூழலில், உலகளவில் ஒளிரும் இடமாக இந்தியா கருதப்படுவதாக ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை அடுத்த 25 ஆண்டுகள் மாற்றப்போவதாக கூறினார். இந்தியாவின் 100-வது சுதந்திர ஆண்டான 2047-க்குள், 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று தெரிவித்தார்.
அதற்கு சாதகமான அம்சங்களான, இளம் தலைமுறையினர் மக்கள் தொகை, முதிர்ந்த ஜனநாயகம், நவீன தொழில்நுட்பம் ஆகியவவை இந்தியாவிடம் இருப்பதாக குறிப்பிட்டார்.