“சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட சுதந்திர தினம் கொண்டாட்டம்..” செல்வப்பெருந்தகை பேட்டி..!!
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சேவ தள அணித்தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார் அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா சிதம்பரம் சிறப்புரையாற்றினார்
இதனைத் தொடர்ந்து மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பசுபதி தன்ராஜ் அவர்களின் சமூக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், கோபன்னா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முன்னதாக அண்ணா சாலை தர்கா பகுதியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் 100 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன் மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன், எஸ் சி பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார்,மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தேசிய கொடியை ஏற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது
காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின விழா தரிசனத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கொண்டாடி கொண்டிருக்கிறது. தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினோம். முன்னாள் தலைவர்கள் சிதம்பரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பசுபதி உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் இனிப்பு வழங்கி சுதந்திர விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இன்றைய தலைமுறை இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது பிரிட்டிஷ்காரர்களை ஆயுதம் இன்றி மகாத்மா காந்தி அடிகளும் நேருவும் முக்கிய தலைவர்களும் எப்படி விரட்டினார்கள் என நினைவு கூற வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக தன்னுயிரை கொடுத்தவர்கள். தேசத்துக்காக தியாகம் செய்தவர்களை இன்று நினைவுக்கு வந்து வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
இந்த தலைமுறை சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எப்படிப்பட்ட தியாகங்களை செய்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நேரு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் எல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
ஆனால் இன்று சுதந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் இன்று உரிமை கொண்டாடுகிறார்கள். சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் இந்த தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது குண்டூசி தயாரிக்க கூட வாய்ப்பு இல்லை ஆனால் அதன் பிறகு உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில் இந்தியா செயல்பட்டது. பசி பட்டினியால் இந்தியா அழிந்து போகும் என்று நினைத்தார்கள். நேரு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில் அவர்கள் காலகட்டத்தில் மிகப்பெரிய சிறப்பு பணிகளை செய்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார்கள். இந்த தேசம் தலை நிமிர்ந்து இருக்கிறது. பசுமை புரட்சி ஆகட்டும், வெண்மை புரட்ச்சி ஆகட்டும் தொழில் புரட்சியை ஆகட்டும் கல்வி புரட்சியாகட்டும் அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ் பேரியக்கம் என தெரிவித்தார். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
போலி சித்தாந்தம் என்பது பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வைத்திருக்க சித்தாந்தம் பாஜகவும் ஆர்எஸ்எஸ்க்கும் என்ன சித்தாந்தம் இருக்கிறது. முதலில் நாம் எல்லோரும் அனைவரும் இந்த தேசத்தின் மக்கள் என்று சொல்ல முடியுமா பாஜகவளையும் ஆர் எஸ் எஸ் இந்த தேசத்தில் பிறக்கும் அனைவரையும் இந்த தேசத்தின் பிரஜைகள் என கூற முடியுமா எனவும் எல்லா உரிமையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென காந்தியடிகள் சொன்னார் அரசியலமைப்பு சட்டங்கள் சொல்கிறது இதை ஆளுநர் சொல்ல முடியுமா இந்த தேசம் என்பது எல்லோருக்கும் தேசம் என சொல்ல முடியுமா ஆர் எஸ் எஸ் சொல்ல முடியுமா பாஜக சொல்ல முடியுமா ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள் இந்த தேசம் அனைவருக்கும் சொந்தமானது இந்த தேசத்தில் யாரெல்லாம் பிறக்கிறார்களோ அவர்களுக்கும் சம உரிமை உண்டு என கூறுகிறார்கள். இவர்கள் தான் பிரிவு பிரிவினைவாதத்தை தூண்டுவார்கள் சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ் ஆனால் இன்று சொந்தம் கொண்டாட துடிப்பது ஆர் எஸ் எஸ் சன்பரிவார் பிஜேபியினர்
இந்த கொடியை பிடிக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு உரிமை உண்டு ஆர் எஸ் எஸ் கிடையாது பாஜகவுக்கு கிடையாது போலி தலைவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் வரலாற்றை இந்த தலைமுறை இளைஞர்கள் படித்து பார்க்க வேண்டும் சுதந்திர விழாவை கொண்டாட வேண்டும் இவர்களுக்கும் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது எதற்காக இவர்கள் பிரிட்டிஷ் காரர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் தான் பாஜக வினர் அவர்கள் என தெரிவித்தார்.
உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மொழி உலகத்தில் வழிகாட்டக்கூடிய மொழி தமிழ் மொழி அகழ்வாராய்ச்சி முடிவுகளும் அதை சொல்கிறது. மூத்த மொழி தமிழை பிடிக்காத ஆளுநர் தமிழை பிடிக்காத மத்திய அரசு தலைவர்கள் இவர்களை இப்படித்தான் பேசுவார்கள். முதலில் தமிழை படிக்க வேண்டும் தமிழ் வரலாறை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.