“அதிகரிக்கும் வரி விலைவாசி..” மத்திய பட்ஜெட்டால் இனி..! ஒன்றிய அரசுக்கே ஆபத்தா..?
கடந்த ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.. அந்த பட்ஜெட்டிற்கு பிறகு மத்திய அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளமல் கைவிட்டுவிட்டதாக நடுத்தர வர்க்கத்தினர் புலம்பி வருகின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினர் நிதி நிலை :
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நடுத்தர மக்களுக்காக பெரிதாக எந்தவொரு திட்டமும் இல்லை. வருமானம் மற்றும் செலவு என இரண்டிற்கும் வரி செலுத்தும் சூழலே அதிகரித்துள்ளது.
இந்த பட்ஜெட்டிற்கு பிறகு மக்களின் வேதனை குரல் இன்னும் அதிகரித்துள்ளது என சொல்லலாம்.
இதனை. சமூக வலைத்தளங்களில் மத்திய பட்ஜெட்டை பலரும் விமர்சித்தனர்.
மக்களின் வேதனை :
பல ஆண்டுகளாக பாஜகவை ஆதரிக்கும் போதிலும், தங்களுக்காக ஏமாற்றப்பட்டதாக நடுத்தர வர்கத்தினர் உணருவதாக ஒரு கருத்து கணிப்பு சொல்லுகிறது.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், “காங்கிரஸ் கட்சியாவது வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், பாஜக அதையும் செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளார்..
பொதுமக்களிடம் இருந்து பாஜக எவ்வளவு தூரம் அந்நியமாக இருக்கிறது என்பதை அது உணர்த்துவதாகவும் நடுத்தர மக்களின் கஷ்டங்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு நிதியமைச்சர் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
பாஜகவுக்கு எதிராக :
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பாஜக தனிப்பெரும்பான்மை உள்ள மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே மிக முக்கிய காரணம்.
2024 லோக்சபா தேர்தலில் மிடில் கிளாஸ் மக்களில் ஒரு பகுதியினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய சர்வேக்கள் சொல்லுகிறது.
இந்த 2024 பட்ஜெட்டிற்கு பிறகு, இத்தனை காலம் அமைதியாக இருந்த மிடில் கிளாஸ் மக்கள் வெளிப்படையாகவே தங்கள் சிக்கல்களைப் பேசத் தொடங்கியுள்ளனர்.
அது குறித்து அரசியல் ஆலோசகர் அமிதாப் திவாரி கூறுகையில், “நடுத்தர வர்க்கத்தின் மீது அதிக வரி சுமை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறார்கள்.
கடந்த 2019 செப்டம்பரில் கார்பரேட் வரி 30%ல் இருந்து 22% ஆகக் குறைத்துள்ளார்கள். கார்ப்பரேட் வரி குறைந்தால் பெரு நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யும் என அரசு நினைத்தது.
ஆனால், தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், அது நடக்கவில்லை. வரி குறைப்பின் நன்மைகள் காப்ரேட்களுக்கே சென்றுவிட்டன” என்கிறார்.
மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையைப் பின்பற்றுவோருக்கு ரூ. 17,500 வரை விலக்கு அறிவிக்கப்பட்டாலும் கூட நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீதான வரிகளை 10%இல் இருந்து 12.5%ஆக உயர்த்தியது மற்றும் இன்டெக்சேஷன் (indexation benefits) பலன்களை நீக்கியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
வரி அதிகரிப்பு :
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பங்குச்சந்தை போன்ற முதலீடுகளைப் பெரியளவில் நம்பி இருந்தனர்.
இந்தச் சூழலில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களைப் பார்த்தாலே மிடில் கிளாஸ் மக்களின் கொந்தளிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒன்றிய அரசுக்குச் சிக்கல் :
மிடில் கிளாஸ் மக்களின் வாக்கு பாஜகவுக்கு ரொம்பவே முக்கியம். கடந்த சில தேர்தல்களாக மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளது.
பாஜக மிடில் கிளாஸ் மக்களுக்கு எதிராகத் திரும்பினால், அவர்கள் வெல்வது கடினம். கடந்த 2004ம் ஆண்டு இதே மிடில் கிளாஸ் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதால் தான் வாஜ்பாய் அரசு வீழ்ந்தது.
இப்போது மோடி அரசுக்கு எதிராக மிடில் கிளாஸ் மக்கள் மத்திய அரசு மீது கோபத்தில் இருப்பது மோடி அரசுக்குக் கண்டிப்பாக நல்ல செய்தி இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..