அசாமில் அதிகரிக்கும் உயிர் இழப்பு..! தொடரும் கனமழை பாதிப்பு..!
அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் கனமழையால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் ஜூன் மாதம் இறுதியில் இருந்து தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த முறை மே மாதமே தொடங்கிவிட்டது. கேரளவில் தொடங்கிய கனமழை மத்திய இந்தியா வரை பெய்துள்ளது.
மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை இரண்டாவது கிளையாகவும் பருவமழை மழையை கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது.
அசாமில் பெய்து வரும் கனமழையால் 19 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மொத்தம் 6 லட்சம் பேர் உயிர் இழந்துள்ள நிலையில். நேற்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜோர்ஹாட் பகுதியில் உள்ள நெமதிகாட்டில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பால் கரைபுரண்டு ஓடி வருகிறது.
இதுவரை 8 ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியினர், இராணுவ படையினர் மற்றும் விமான படையினர் சேர்ந்து “கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், கச்சார், தேமாஜி, மோரிகான், உடல்குரி, திப்ருகார், டின்சுகியா, நாகோன், சிவசாகர், தர்ராங், நல்பாரி, சோனித்பூர், தவாம்பூர், தவாம்பூர், தவாம்பூர், கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டதில் மொத்தம் 6,44,128 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நேற்று 45 பேர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காரசிங்கா தேசிய பூங்காவில் புகுந்த வெள்ளத்தால், வன விலங்குகளும் உயிர் இழந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்களை பாதுகாக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ