அதிகரிக்கும் போதை பொருள் புழக்கம்..! காவலர்கள் அதிரடி சோதனை..! ஒரே நாளில் பிடிபட்ட கஞ்சா மதிப்பு..?
தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவாடி இரயில் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தொப்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று தொப்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பையை பரிசோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 400 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவா(22) மற்றும் வசந்த்(21), கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), அனுமந்தன் நகரை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, இதில் யார் யாருடன் தொடர்பு உள்ளது.. எங்கிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டது என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..