ADVERTISEMENT
திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று திடீர் சோதனை…
திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகரில் புது மார்க்கெட் வீதி , பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகர காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் காவல்துறையினர் பெருமாள் கோவில் வீதியில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு சொந்தமான கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.