இந்தியாவிலேயே குஜராத்தில் தான் அதிகளவு மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் நிதி ஆயோக் வெளியிட்ட தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் அறிக்கையின்படி,
குஜராத் மாநிலத்தில் 38.09 % மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர். குஜராத்தின் கிராமப்புற மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஊட்டச்சத்து இல்லாமல் உள்ளனர் (44.45 %), நகர்ப்புறங்களில் 28.97 % பேர் ஊட்டச்சத்து குறிபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர்.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் குஜராத்தை விட ஊட்டச்சத்து முன்னணியில் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. NFHS5 (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு) தரவுகளின்படி, வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அடிப்படையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் உள்ள குழந்தைகளில் 39 %பேர் தங்கள் வயதுக்கு ஏற்ப எடை குறைவாக உள்ளனர். மேலும், குஜராத் மாநிலம் எடை குறைந்த குழந்தைகள் 39.7 % -துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சுகாதார அளவீடுகளின் அடிப்படையில் மாநிலத்தின் மோசமான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.
Discussion about this post