அவளின் பார்வைக்கு நான்.! எழுத்து கிறுக்கச்சி – கவிதை-11
சாலையோரம் பூக்கள் எல்லாம்
உனக்கென தலை சாய்க்கும்
நீ நாடாகும் பாதையில்
உனக்கென்று பாதை வகுக்கும்..
புடவை கட்டி நடமாடும் தங்கச்சிலையே
உன் புன்னகையில் வெண்ணிலவும் தோற்குமடி..
என்னை காதல் வளையல் வீழ்த்திய
உனது கண்கள் இன்றும் என்னை கொள்கிறது..
பதில் தெரியாமல் அல்ல..,
உன் மீது நான் கொண்ட காதலின் ஆழம் புரியாமல்..
-லோகேஸ்வரி