வாணியம்பாடி வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை வழிமறித்து கொலை மிரட்டல்..
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய நபரின் இயந்திரத்தை பறிமுதல் செய்த வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் , ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் சிலர் கள்ளத்தனமாக மணல் கடத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வட்டாச்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட அன்பரசன் என்பவரின் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது, அன்பரசனின் சகோதரர் சிவக்குமார் என்பவர் வட்டாச்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.