முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளர்.
தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவி காலமானார்.
முதுமை சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி மறைவு ஏற்கமுடியாத பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நீதியரசர் பாத்திமா பீவி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.