நீங்கள் பார்க்க மறந்த முக்கிய செய்திகள்…!! உங்கள் பார்வைக்காக…!!
காரைக்காலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் தெற்கு தொகுதி இளைஞர் கமிட்டியின் துணைத் தலைவர் சமீர் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்தத்தை நன்கொடையாக வழங்கினர்.
தேசிய சாலை பாதுகாப்பை முன்னிட்டு, நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகளை வழங்கினர். இதில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அய்யனோர் அம்மனோர் கோவில் கம்பட்டராயர் பண்டிகை வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதன் பின்னர் கை விரலை மட்டும் பயன்படுத்தி கல் தூக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..