“தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
இந்தியாவிலேயே காலநிலை மாற்றங்கள் குறித்து ஆராய முதல்முறையாக மாநாடு நடத்திய மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே காலநிலை மாற்றங்கள் குறித்து ஆராய முதல்முறையாக மாநாடு நடத்திய மாநிலம் தமிழ்நாடு என்றும் எனது தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி இருப்பதாகவும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
அதேப்போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தொகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..