ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரம்..! வெளியிட்ட போலீஸ்..!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த “ஆர்ம்ஸ்ட்ராங்” கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 8 பேர் கொண்ட கும்பலால் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கஸ்டடியில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி சென்னை மாதவரத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்த நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் வேலை ஒழுங்காக நடக்கிறதா என பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகே, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அத்துடன் அந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டும் காட்சிகளும் அதில் தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், இக்கொலையை செய்வதற்க்கு முன் எப்படி வந்தார்கள்..? எப்படி அவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினார்கள்..? என்பதை விவரிக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..