என்னது வலி இருக்கும் இடத்தில் கோடாரி வெட்டா! வித்தியசமான வழிபாடு.. தட்டி தூக்கிய போலீஸ்..!
கர்நாடக மாநிலம் மேடகுட்டா பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று காசிலிங்கேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரி ஆக உள்ளார். இந்தக் கோயிலில் ஒரு விசித்திரமான வழிபாடு ஒன்று இருந்து வருகிறது.
அதாவது, பக்தர்கள் தங்கள் உடலில் எங்கேயாவது தீராத வலி இருந்தால், அதை குணப்படுத்த இந்தக் கோயிலுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.
கோயில் பூசாரி ஜக்கப்பாவிடம் தங்களுக்கு உடலில் உள்ள பிரச்சினையை பற்றி சொன்னால், வலி இருக்கும் இடத்தில் கோடாரியால் வெட்டுவாராம். அதாவது, வலி இருக்கும் இடத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் பூசாரி வெட்டுவாராம். அதன் பின் மஞ்சள் பொடியை காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டுப்போடுகிறார். இதன் மூலம் அவர்களின் வலி சரியாவதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதி பட்டு வந்த நிலையில், இக்கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை சிலர் படுக்க வைத்து கை கால்களை பிடித்து வைத்தனர்.
பின்னர் கட்டா அவரின் வயிற்றில் கோடாரியால் இருமுறை வெட்டினார். இதில் ரத்தம் பீறிட்டு வந்த நிலையில் பின்னர் மஞ்சள் பொடியை வைத்து கட்டு போடுகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கண்டனம் தெரிவித்து இந்த கால கட்டத்திலும் இது போன்ற கொடூரமான மூட நம்பிக்கையை பின்பற்றுகிறார்களே என காட்டமாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இதனைதொடர்ந்து இந்த வீடீயோ போலீசாரின் கவனத்திற்கு சென்றது. வழக்கு பதிவு செய்த போலீசார் பூசாரி ஜக்கப்பாவை கைது செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்