காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜா பட்டேரியா பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராஜா பட்டேரியா மோடியை கடுமையாக விமர்சனம் செய்தும் அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவில், மோடி தேர்தலின் நடைமுறைகளை மாற்றி வருகிறார், அவர் மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் மக்களை பிரிக்கிறார். மேலும், இவரின் செயல்களால் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிர்க்கலாமே கேள்வி குறியாகியுள்ளது என்றும் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் இந்தியா அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் அவரை கொல்லுங்கள் அதாவது அவரை தோற்கடியுங்கள் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், பாஜகவினர் சார்பில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீது புகார்களும் பதியப்பட்டு அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும் அந்த வீடியோவில் கொலை செய்ய வேண்டும் என்று கூறுவது அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதே அர்த்தம் என்றும் ராஜா பட்டேரியா விளக்கியுள்ளார்