“நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் பணம்.. ” அர்ஜுன் சம்பத்துக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு..?
விஜய் சேதுபதி :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் “விஜய் சேதுபதி..” பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் விஜய் சேதுபதி.. தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் திறமையாலும் இன்று கோலிவுட் வரை புகழ்பெற்றவர் என சொல்லலாம்..
விஜய் சேதுபதிக்கு என்று ஜீரோ ஹேட்டர்ஸ் இருக்கும் நிலையில்.. அவரை உதைத்தால் பணம் என்று அர்ஜுன் சம்பத் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
அர்ஜுன் சம்பத் :
நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை :
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.
இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை, உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக 1,001 ரூபாய் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பு :
இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் மீது பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சாந்தி புகார் அளித்தார்.
கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவருக்கு தண்டனையாக 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அதைசெலுத்தினார்.
கடுப்பான ரசிகர்கள் :
அதே சமயம் விஜய் சேதுபதி குறித்து, சம்பத் கூறியுதற்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து.., கமெண்ட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..