இது போன்ற செய்தி வந்தால் மக்களே உஷார்…!!
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் அனுப்பப்படும் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தியைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும்.. அகில இந்திய எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க..,
இந்திய அரசின் தொலை தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி அக்.20-ஆம் தேதி செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த பேரிடர்கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது.
எனவே இதற்கு பொதுமக்கள் எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்…