உங்களை அழகாக மாற்ற சிறந்த வழிகள்..! எளிய முறைகள்..!
-
பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் வைத்திருந்து தலையை அலசினால் பொடுகு கட்டுக்குள் வரும்.
-
பரு மறைய நாட்டுக்கோழி முட்டையுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து பரு மீது தடவினால் சரியாகும்.
-
முகம் பளப்பளப்பாக மாற திராட்சையின் சாறை எடுத்து முகத்தில் தேய்ய வேண்டும்.
-
தக்காளியின் சாற்றை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்தால் முகம் பொலிவாகும்.
-
ஆப்பிளை தோல் நீக்கி அரைத்து அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் தேய்த்து வர முகச் சுருக்கம் மறையும்.
-
உடம்பில் ஏற்ப்படும் சோம்பலை தடுக்க தினமும் புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் செய்து சாப்பிடலாம்.
-
சமையலுக்கு பயன்படுத்திய பிழிந்த எலுமிச்சை பழத்தை முகத்தில் தேய்த்து ஊற வைத்து கழுவினால் முகம் பொலிவாகும்.
-
உதட்டின் மேல் வளரும் முடியினை நீக்க, மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து தடவி வந்தால் நாளடைவில் முடி வளராது.
-
கால்களை சுத்தம் செய்ய, உப்பு கலந்த மிதமான சூடு உள்ள தண்ணீரில் 15 நிமிடம் வைத்திருந்து ஒரு சிறிய பிரஷ் பயன்படுத்தி தேய்த்து கழுவினால் சுத்தமாகும்.