விஜய் நடிப்பதை நிறுத்தினால், சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை….. நடிகை கஸ்தூரி பேட்டி..!
நடிகர் விஜய்:
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை நடித்த விஜய் நாளைய தீர்ப்பு மூலம் நாயகனாக அறிமுகமானர். முதல் படத்தின் போதே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இவர் நடித்த மாண்புமிகு மாணவன் திரைப்படம் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றாலும் ஒரு முழுமையான நாயகனாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆக்சன் ஹீரோ:
இதனை தொடர்ந்து பூவே உனக்காக உள்ளிட்ட ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து காதல் படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறினார்.
அப்போதிருந்து இன்று வரை விஜயின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதால் சினிமாவை விட்டு விலக உள்ளார். எனவே அவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்கும் தளபதி, அதன்பிறகு, முழுநேரமும் அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திரம், நடிப்பதை நிறுத்தினால், சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று, ஒருசில சினிமா ஆர்வலர்கள் கருத்து கூறி வந்தனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தற்போது விஜயை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி பேட்டி:
அந்த பேட்டியில், விஜய் நடிப்பதை நிறுத்தினால், சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியுள்ளார். மேலும், 30 வருடங்களாக தான் விஜய் நடித்து வருகிறார்.
ஆனால், 150 வருடங்களாக சினிமா இயங்கி வருகிறது. அது ஒரு கலை. அது யாருக்காகவும் நிற்காது என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-பவானி கார்த்திக்