நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணம்..? மஞ்சள் வீரன் டிடிஎப் வாசன் வீடியோ..!!
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் தற்போது ஒரு கண்ணீர் மல்கும் சர்ச்சை கொடுத்துள்ளார். (Twin Throttlers ) என்ற ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அதிக பைக் ரையுடு செய்வதை வீடியோவாக எடுத்து போட்டு மில்லியன் கணக்கான சப்ஸ்க்ரைபரை சம்பாதித்தார்.
அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது., அவர் எங்கு சென்றாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுமாம்.., இதனால் பலமுறை போக்குவரத்து காவல் துறையினர் இவரை எச்சரித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் பிரபலம் ஜிபி.முத்துவை அழைத்துக்கொண்டு அதிக வேகமாக பைக் ரைடு செய்துள்ளார். அப்போது ஜி.பி.முத்துவிற்கு ஹெல்மட் கூட கொடுக்காமல் அதிவேகமாக சென்றுள்ளார். முக்கியமாக இரு கைகள் விட்டி ஓட்டிச்சென்றுள்ளார்.
அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.., அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் அதிவேகமாக பைக் ஓட்டுவது இந்த கால இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை தூண்டுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்றும் இவர் இப்படி வேகமாக ஓட்டுவது மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இவர் செய்யும் செயல்கள் இருக்கின்றன என இவர் குறித்து புகார்களும் குற்றச்சாட்டுகளும் பல எழுந்து வருகின்றனர்.
பல புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் நெல்சம்மாணிக்கம் ரோட்டில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது..,
ஆனால் இதுகுறித்து வாசன் நான் கார் ஓட்டவேயில்லை இயக்குனர் தான் அன்று காரை ஓட்டினார். நான் மது அருந்திவிட்டு காரை ஒட்டியதாக பலரும் சொல்லுகின்றனர். ஆனால் அதுவும் உண்மையில்லை, நாங்கள் அன்று மது அருந்தவேயில்லை . இன்னும் சிலர் நான் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஆட்டோவில் தப்பி ஓடியதாக சொல்லுவது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
என்னை எந்த அளவிற்கு வேதனைக்கு ஆளாக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆளாக்குகிறார்கள். ஒரு சிலர் பேசும் பேச்சு என்னை தற்கொலைக்கு தூண்டுகிறது. வருங்காலத்தில் நான் தற்கொலை செய்துகொண்டால் அது தற்கொலையல்ல திட்டமிட்ட கொலை. அது உங்களுக்கு ஒருநாள் புரியும், என பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.