மீண்டும் கார் விபத்தில் சிக்கிய டி.டி.எப்.வாசன்..!! தப்பி ஓடிய சி.சி.டி.வி காட்சி..!!
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்தது மட்டுமின்றி அதை வீடியோவாகவும் பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் டி.டி.எப் வாசன் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைந்தவ டி.டி.எப் வாசன் “மஞ்சள் வீரன்” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க போவதாக வெளியிடப்பட்ட போஸ்டர், அவரின் ரசிகர் களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
ஏற்கனவே அதிவேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும், நம்பர் பிளேட் இல்லாமல் கார் ஓட்டியது, ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியது, என பல சாலை விதி மீறல்கள் செய்த குற்றத்திற்காக டி.டி.எப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சை கிளப்பும் விதமாக “டி.டி.எப் வாசன் மற்றொரு வழக்கில் சிக்கியுள்ளார்”. சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் நண்பர்களுடன் டி.டி.எப் வாசன் சென்றுள்ளார். அந்த சமையம் கார் கட்டுப்பாட்டை இழந்ததால்.., முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது.
அந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. டி.டி.எப் வாசனின் காரும் முன் பக்கம் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து நேர்ந்த பின்.., டி.டி.எப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோ பிடித்து தப்பி சென்றுள்ளனர்.
விபத்தில் காயம் அடைந்தவருக்கு எந்த மருத்துவ உதவியும் அளிக்காமல் ஆட்டோ பிடித்து சென்ற டி.டி.எப் வாசன் பற்றிய இந்த விபத்து வீடியோ அங்கிருந்த சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில நெட்டிசைன்கள் அவர் ஓட்டம் பிடித்ததை காமெடியாக எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.
இது குறித்து பேசிய போக்குவரத்து காவல் துறையினர், இதுவரை நேர்ந்த விபத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து ஒருவர் கூட வந்து புகார் கொடுக்கவில்லை, யாரவது பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் கொடுத்தால் கூட சம்மந்தப்பட்ட டி.டி.எப் வாசன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என அமைந்தகரை போக்குவரத்து காவல் துறையினர் கூறினர்.
மேலும் இந்த விபத்து காரணம் டி.டி.எப்.வாசனா அல்லது அவரின் உடன் இருந்த நண்பர்களா என்று விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும், என்று போக்குவரத்து காவலர் கூறினார்.