முகம் கண்ணாடி போல் ஜொலிக்க அத்திபழ ஃபேஸ் பேக்..!!
அத்திப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி ஆகியவை அதிகம் இருப்பதால் இதை நம் உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது.
அத்திப்பழம் வயிறு மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.இதனால் தான் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது.
மேலும் அத்திப்பழத்தை பேஸ்ட்டாக தயார் செய்து, முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக மாறுமாம்.
சரி வாங்க இந்த அத்திபழ ஃபேஸ் பேக்கை எப்படி ரெடி பண்ணலாம்னு பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
-
அத்திப்பழம் – 2 (தோல் நீக்கியது)
-
தேன் – 2 டீஸ்பூன்
-
தயிர் – 2 டீஸ்பூன்
செய்முறை:
-
அத்திப்பழ ஃபேஸ்பேக்கை ரெடி பண்றதுக்கு முதலில் அத்திப்பழத்தை தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.
-
அத்துடன் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
-
இப்போது இந்த பேக்கை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி சுத்தமான காட்டன் துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள, ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் காய வைத்த பின் முகத்தை கழிவிக்கொள்ளலாம்.
-
அத்திபழத்தில் இருக்கும் சத்துக்கள் நம் முகத்தில் அழியாமல் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை மறைத்து முகம் மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்க உதவியாக இருக்கிறது.